அதிமுக தலைமைக் கழகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார். தலைமை கழகத்துக்கு உரிமை கொண்டாடும் விதத்தில் ஓ.பி.எஸ். தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.


அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக ஒபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 11ஆம் தேதி, அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் வெடித்தது. 


அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்தை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அதை சீல் வைத்து மூட உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் முன்னதாக விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஆர்.டி.ஓ. ஒப்படைக்க வேண்டும் எனவும், காவல்துறை 24 மணி நேரமும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு மாதத்திற்கு பிறகுதான் தலைமை கழகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


எம்.ஜி.ஆர். மறைவின் போது இதுபோன்ற பிரச்சினை எழுந்த நேரத்தில் ஜானகி வசம் அ.தி.மு.க. தலைமை கழகம் இருந்ததால் அப்போது சாவி அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவுபடுத்திய நீதிமன்றம், ”இப்போது எடப்பாடி பழனிசாமி வசமே தலைமைக் கழகம் இருந்துள்ளது. எனவே சாவியை அவரிடமே ஒப்படைக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தியது.


இச்சூழலில், அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.  “அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு அது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.


தலைமைக்கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததது தவறாகும். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானே அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பில் உள்ளேன்” இவ்வாறு ஓ.பி.எஸ். மனுவில் கூறி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண