செம்பரம்பாக்கத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செப்.30) குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (சிஎம்டபிள்யூஎஸ்எஸ்பி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு ஆலையில் 53 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட 500 மிமீ குழாயை பிரதான 2000 மிமீ பைப்லைனுடன் இணைக்கும் பணி வெள்ளிக்கிழமை (செப்.30) ​​காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. செம்பரமபாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பம்பிங் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, இப்பகுதிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு வைத்துக்கொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் ஆர்டர் செய்ய பின்வரும் செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளவும்:

அம்பத்தூர் - 8144930907அண்ணா நகர் - 813990908தேனாம்பேட்டை - 8144930909கோடம்பாக்கம் - 8144930910வளசரவாக்கம் - 814493091ஆலந்தூர் - 8144930912அடையாறு - 8144930913பெருங்குடி - 814930914” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியினை கடைசி நாளான இன்றைக்குள் செலுத்திடுமாறும் குடிநீர் வழங்கல் வாரியம் முன்னதாக கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும் படிக்க: Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை

Skytrax World Airline Awards 2022 : கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஏர்லைன்ஸ் பட்டியல் ! முதலிடத்தை பிடித்த ‘கத்தார் ஏர்லைன்ஸ்’!