செங்கல்பட்டு  மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் விரைவு ரயிலில் அடிபட்டு மூன்று இளைஞர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 


செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சுகுமார் என்பவருடைய மகன் அசோக்(24), குமார் என்பவருடைய மகன் மோகன்(17) ராமு என்பவருடைய மகன் பிரகாஷ்(17) இவர்கள் 3 மூன்று பேரும் கூட்டாளிகள். இவர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்வது வழக்கமாக வைத்துள்ளனர்



இந்நிலையில் இன்று வழக்கம்போல் மாலை தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் அமர்ந்து இன்ஸ்டாகிராமிர்க்கு பதிவு செய்வதற்காக வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயில்வே இருப்புப் பாதையில் நின்று செல்போனில் வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ரயில் மோதிய விபத்தில் அசோக், மோகன், பிரகாஷ், ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.



தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர் மூன்று இளைஞர்களுடைய சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்பி மோகத்தால் ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ரயிலில் மோதிய விபத்தில் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 



இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மூன்று பேரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர் .இதில் அசோக்கிற்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது. அதே பகுதியை சேர்ந்த மூன்று பேரும் அடிக்கடி ரயில்வே பாதையில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசிக் இருப்பார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மூன்றாவது தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் செல்லும்,  என்பதால் அந்தப் பாதையில் பொதுவாக அதிக அளவு ரயில்கள் செல்லாது.


புதிதாக துவங்கப்பட்ட இந்த ரயில்வே பாதையில், அதிக அளவு ரயில்கள் செல்லாத காரணத்தினாலே, அப்பகுதி இளைஞர்கள் சிலர் அதில், ஆபத்தை உணராமல் அமர்ந்து கொண்டு கதை பேசிக்கொண்டு இருப்பார்கள்.


 


அவ்வாறு இந்த சம்பந்தப்பட்ட மூன்று பேரும் , நேற்று சம்பவம் நடைபெற்றபோது, தண்டவாளத்தில்  வழக்கம் போல் அவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல் அல்லது தண்டவாளத்தில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்திருக்கலாம் , அப்போது இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம், என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை தொடங்கி உள்ளதாக தெரிவித்தனர்.


மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண