தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 444 உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்: காவல் உதவி ஆய்வாளர் (SUB-INSPECTORS OF POLICE)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 444
காலியிடங்களின் விவரம்:
காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா) SUB-INSPECTORS OF POLICE (TALUK): 399 (ஆண் – 279, பெண்/ திருநங்கை – 120)
காவல் உதவி ஆய்வாளர் (ஆயுதப்படை) SUB-INSPECTORS OF POLICE (ARMED RESERVE): 45 (ஆண் – 32, பெண்/ திருநங்கை – 13)
வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC, BC (M), MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC, SC(A), (ST) மற்றும் திருநங்கைகள் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.36,900 – ரூ.1,16,600
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு: இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது. இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.
உடற்தகுதித் தேர்வு: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இது 15 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
நேர்முகத் தேர்வு: உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
NCC அல்லது NSS அல்லது விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் 100 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், வேலை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்து
https://si2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action அதன் மூலம் திறக்கப்படும் இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2022 ஆக இருந்தது. தற்போது 10 நாட்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இந்த இரண்டு pdf-களில் ஒன்றை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
PDF 1 : https://tnusrb.tn.gov.in/pdfs/siadvertisement.pdf
PDF 2: https://tnusrb.tn.gov.in/pdfs/informationbrochuresubinspectorofpolice.pdf