Chennai Train: 4ஆம் வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27ம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் சேவை:
சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கடற்கரை-மயிலாப்பூர், கடற்கரை-வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை உள்ளது. இதற்கிடையில், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
பறக்கும் ரயில் சேவை ரத்து:
சென்னை கடற்கரை முதல் சிந்தாரிப்பேட்டை வரை 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயல்வே கோட்டம் அறிவித்துள்ளது. 3.53 கிலோ மீட்டர் இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் வரும் 26ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதன் பிறகு 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் சேவை ரத்து செய்யப்படுவதற்கு இணை நடவடிக்கையாக பொதுமக்கள் போக்குவரத்திற்கு வேறு வழிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். சென்னை கடற்கரை-எழும்பூர் இடைய நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
National Film Awards 2023 LIVE: 69வது தேசிய விருதுகள்...இந்த ஆண்டு எந்தெந்த படங்களுக்கு வாய்ப்பு?