இந்திய திரையுலகிற்கே தனது இசையால் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இவரை, விவாகரத்து செய்வதாக இவரது மனைவி சாய்ரா பானு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென அறிவித்தார். இவர்களது விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா?


இவர்களது விவாகரத்திற்கு சரியான காரணம் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த விவகாரத்தில் தனியுரிமை தர வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குழுவில் உள்ள கிட்டார் இசைக்கலைஞரான 29 வயதான மோகினி தே தன்னுடைய  கணவரான இசைக்கலைஞர் மார்க் ஹர்ட்சச்சை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.


இதையடுத்து, சமூக வலைதளங்களில்  ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாலே விவாகரத்து நடந்ததாக தகவல்கள் பரவியது. இவர்கள் இருவரது விவாகரத்து குறித்தும் தொடர்ந்து வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ராபானு விவாகரத்திற்கான வழக்கறிஞர் வந்தனா ஷா நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.


சாய்ரா பானு வழக்கறிஞர் சொல்லும் உண்மை:


அதில், அவரிடம் சமூக வலைதளங்களில் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மோகினி தே குறித்து வரும் தகவல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்திற்கும், மோகினி விவாகரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சாய்ராவும், ஏ.ஆர்.ரஹ்மானும் அவர்களது முடிவை அவர்களே எடுத்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ராபானு இருவரும் உண்மையானவர்கள். இந்த முடிவு மிகவும் எளிதாக எடுக்கப்படவில்லை. இதை நீங்கள் போலி திருமணம் என்று கூற முடியாது. இது இணக்கமாக முடிவு எடுக்கப்பட்ட விவாகரத்து ஆகும். “ என்று கூறினார்.


ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ராபானு இவர்கள் இருவரும் கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதியினருக்கு அமீன் என்ற மகனும், ரஹீமா, கதீஜா என்ற மகள்களும் உள்ளனர். சாய்ரா பானு விவாகரத்து முடிவை எடுத்ததில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முழு உடன்பாடு இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அவர்களது 30வது திருமண நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்ததாக மிகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.


பிரபலங்கள் பலரும் இவர்களது முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று கூறியதுடன், மீண்டும் சேர்வது குறித்தும் ஆராய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.