Adani: சோலார் திட்டங்கள் தொடர்பாக லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு:


சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாக,  உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 குற்றப்பத்திரிகையில், அதானி உடன் சேர்ந்து இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாகிகளான சாகர் ஆர் அதானி மற்றும் வினீத் எஸ் ஜெயின் ஆகியோர் கூட்டாட்சி சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நியூயார்க்கின் புரூக்ளின் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், அதானி மற்றும் பிற பிரதிவாதிகள் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் திரட்ட முயன்றபோது திட்டம் பற்றி பொய் சொன்னார்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.



தீவிர விசாரணை:


பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அதானி தரப்பு ஒரு விரிவான திட்டத்தைத் திட்டமிட்டனர்" என்று நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் பிரியன் பீஸ் தனது அறிக்கையில் தெரிவித்தார். அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருக்கலாம் என்றும், அந்த நிறுவனத்தின் நிறுவனர் அதானியின் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. எரிசக்தி திட்டத்தில் சாதகமான முடிவுகளைப் பெற இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு முறையற்ற பணம் செலுத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதானி குழுமத்தின் அமெரிக்க அலுவலகங்களுக்கான தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட்:


நியூயார்க் நீதிமன்ற பதிவுகளின்படி, கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளார்.  அந்த வாரண்டுகளை வெளிநாட்டு சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைக்க வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.  இந்த வழக்கு, அமெரிக்க லஞ்ச ஒழிப்புச் சட்டமான, வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படுகிறது.  ஃபோர்ப்ஸ் இதழின்படி, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 69.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். உலகின் மிகப்பெரிய 22வது பணக்காரர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் ஆவார். கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை  இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து, 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனம், 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியை கடன்கள் மற்றும் பத்திரங்கள் மூலமாக, பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் திரட்டியதாக  புகார் எழுந்துள்ளது.


குஜராத்தை பூர்வீகமாக கொண்ட பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் நரேந்திர மோடி ஆகிய இருவரும், நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது.