Chennai Book Fair: புத்தக வாசகர்களுக்கு முக்கியச் செய்தி; இன்று சென்னை புத்தகக் கண்காட்சி கிடையாது

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

Continues below advertisement

கனமழை காரணமாக 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று (ஜன.8) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சென்னை மற்றும் சுற்றியுள்ள  மாவட்டங்களில்  கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக  இன்று 08/01/2024  ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் என புத்தகக் கண்காட்சியை நடத்தும் பபாசி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

புத்தக பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தக கண்காட்சி கடந்த 3ஆம் தேதி மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இதனை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். சுமார் ஆயிரம் அரங்குகள் அமைக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. 

புத்தக்கண்காட்சி தொடங்கிய தினத்தில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கான புத்தக்ப் பிரியர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமைகளில் பெரியவர்கள் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு சாரைசாரையாக புத்தகக் கண்காட்சிக்கு வந்தனர். 

வழக்கமாக புத்தகக் கண்காட்சி நடைபெறும்போது பள்ளிகளில் இருந்து மாணவர்களை பள்ளி நிர்வாகமே கண்காட்சிக்கு அழைத்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக பெரியவர்களுக்கு புத்தகக் கண்காட்சியில் நுழைவுக் கட்டணம் ரூபாய் 10 வசூலிக்கப்படும், ஆனால் பள்ளி மாணவர்களுக்கு இந்த நுழைவுக் கட்டணம் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. 

புத்தக் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு புத்தகமும் அதன் அடக்கவிலையில் இருந்து 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும் என்பது இந்த புத்தக் கண்காட்சியின் சிறப்பு. சென்னை புத்தக கண்காட்சியானது வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் செயல்படும். 

ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில்  தினமும் மாலையில் எழுத்தாளர்களுடனான உரையாடல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெறும். பல புத்தகங்களின் வெளியீடும் இங்கு நடைபெறும் என்பது குறிப்பிடத் தக்கது. 

புத்தகங்கள் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது நெட்வொர்க் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்களும், பிஎஸ்என்எல் வைஃபை சேவையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு புத்தக கண்காட்சியை 50 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு விற்பனை குறித்த விபரம்

 கடந்த ஆண்டு நடைபெற்ற 46ஆவது புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் பேர் வந்தனர் எனவும்  16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது எனவும் இருப்பதாக பபாசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


TN Rain News LIVE: புதுவையில் 12 செ.மீ மழை பதிவு.. மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை..

Continues below advertisement