தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு வருகின்ற 2023ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 


அதன்படி, தமிழ்நாட்டில் உலகளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நடத்தப்படும் என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இந்த மாநாடு சென்னையில் இன்றும் (டிசம்பர் 7ம் தேதி), நாளையும் (டிசம்பர் 8ம் தேதி) நடத்தப்படுகின்றன. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.


மாநாட்டு தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் நடைபெறுகிறது. 


இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


கனமழை எச்சரிக்கை:


லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


அதன்படி, தமிழ்நாட்டில் இன்று அனேக இடங்களில் அதாவது கடலோர பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தலைநகர் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலியை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


என்ன ஆகும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு..?


சென்னையில் வருகின்ற புதன்கிழமை வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்று தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு, அரசு பல கோடிகளை செலவழித்தது. அதனை தொடர்ந்து, கனமழை காரணமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடும் ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை ஏற்படுமா.? உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்காக தமிழக அரசு சார்பில் பல கோடியை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி, கனமழை காரணமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு தள்ளிவைக்கப்படுமாயின் தமிழ்நாடு அரசுக்கு வீண் செலவே ஆகும். 


காலை முதல் சென்னையில் பல இடங்களில் சாரல்:


மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு கீழடு சுழற்சி காரணமாக சென்னை முதல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதலே பல பகுதிகளில் சாரல் முதல் மிதமான மழை பெய்து வருகிறது.