தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  கிராம சபை கூட்டங்கள் எங்கு நடைபெறுகிறது என்பதை பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


கிராமசபைக் கூட்டம்:


அனைத்து கிராமங்களின் ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கூட்டப்பட்டு வருகிறது. வரும் மே 1 ஆம் தேதி நடத்தப்படும் கிராம சபை கூட்டம் தொடர்பாக  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


 அதில், ”பார்வை 1-60 காணும் அரசாணையின்படி, தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். பார்வை 2-ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்திட வேண்டும்.


மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்:


கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி (Android application) ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், 01.05.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 05.05.2023-க்குள் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


கிராம சபை கூட்டங்களில் அந்த பகுதியில் இருக்கும் நிறை குறைகளை கேட்டு அறியப்படும். மேலும் மக்கள் அவர்களுக்கு தேவையான விஷயங்கள் அல்லது என்ன குறை இருக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிப்பார்கள். இதனை கேட்டறிந்த பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 


Labours Strike: 12 மணி நேர சட்டமசோதா நிறுத்திவைப்பு: தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக நிறுத்தம்


Gold, Silver Price: ஷாக் ஆகாதீங்க.. மீண்டும் 45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன?


Valparai Flood: வால்பாறை கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளம்: சிக்கிக்கொண்ட புதுமணத் தம்பதி..! நடந்தது என்ன?