கணவன் மனைவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உறவினர்களிடம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது தாழம்பூர் போலீசார் கணவனை கைது செய்து சிறையில் அடைப்பு

 


 கணவன் மனைவிக்கு இடையே சண்டை


சென்னை நாவலூர் அருகே ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 35), இவரது மனைவி வைசாலி (வயது 33),  இருவருக்கும் 2020 ம் ஆண்டு திருமணமாகி 11 மாதம் பெண் குழந்தை உள்ளது. தம்பதிகள் பொன்மார் ஊராட்சி பகுதியில் உள்ள  மலைத்தெருவில் வசித்து வருகின்றனர். விமல்ராஜ் பொன்மார் மலைத்தெருவில் உள்ள கிருத்துவ  ஆலயத்தில், உதவி ஊழியராக உள்ளார். கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்துவேறுபாட்டால் பிரச்சனை ஏற்பட்டுவந்துள்ளது.

 திருமணம் தாண்டிய உறவு


அதேபோல் நேற்று முன்தினம் மாலை கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனைவி வைசாலி கணவனிடம் வேறொரு பெண்ணிடம் தொடர்பில் ஈடுபட்டிருப்பதாக கணவன் விமல்ராஜை கடுமையாக கண்டித்துள்ளார். அதற்கு மாறாக கணவனும் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால்,  இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தி வாயில் துணியைச் சுற்றி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

 நாடகத்தை அரங்கேற்றிய மத போதகர்


 

உடனே விமல்ராஜ்  மனைவியின் நண்பருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் இறந்தது போல் நாடகமாடி சடலத்தை  சொந்த ஊரான ஒட்டியம்பாக்கம் வீட்டிற்கு எடுத்துசென்று அங்குள்ள உறவினர்களிடம் மூச்சுத்திணறல் போன்ற உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறி அஞ்சலிக்காக வைத்துள்ளார். இதற்கிடையில் இறந்த வைசாலியின் முகம், கழுத்து, உடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டதை கண்டு உறவினர் மத்தியில் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து  நேற்று மாலை  தாழம்பூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தாழம்பூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சடலத்தை  ஓட்டியம்பாக்கம் சென்று  மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 என்ட்ரி கொடுத்த காவல்துறை


 

பின்னர் , போலீசார் கணவன் விமல்ராஜை  கைது செய்து விசாரணை செய்ததில் மனைவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து  விமல்ராஜை தாழம்பூர் போலீசார்  கைது செய்தனர். திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆனதால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 11 மாத குழந்தையின் பரிதவித்து நின்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் விசாரித்த பொழுது :  கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை நடைபெற்று வந்துள்ளது.  சம்பவத்தன்று  மூச்சுத் திணறல் ஏற்பட்டு  வைசாலி  உயிரிழந்ததாக தகவல் வந்தது.  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டது,  கணவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.  இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில்  புகார் குறித்து விசாரணையை   மேற்கொண்டதில்,  இந்த கொலை சம்பவத்தை கணவர் அரங்கேற்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்தது.  இதனை அடுத்து உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கணவரை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்தோம் என தெரிவித்தனர்