Maduravoyal To Sriperumbudur Elevated Road "சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயில் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது"


சென்னை போக்குவரத்து நெரிசல் - Chennai Traffic 


சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்கி தவித்து வருகிறது. காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். 


இதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அவ்வாறு உயர்மட்ட மேம்பாலங்கள் சில கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கும்போது, தொலைதூரம் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர பொது மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 


சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கக்கூடிய பகுதியாக மதுரவாயல் இருந்து வருகிறது. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாகவும் மதுரவாயல் உள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் மதுரவாயல் வழியாக, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று வருகின்றன.


இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்தினர்கள் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நீண்ட நாளாக கோரிக்கை இருந்து வருகிறது.


இதையும் படிங்க: Chennai Peripheral Ring Road: சென்னையை மாற்றப் போகும் எல்லை சாலை திட்டம்.. முடிவடைவது எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்


மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்ட மேம்பால சாலை 


சென்ன- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உயர் மட்ட 6 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயல் வரை இந்த உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. 


23 கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் 3780 கோடி ரூபாய் செலவில் இந்த உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு செய்ய வேண்டிய பணித்திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த திட்டத்தை சேர்த்துள்ளது. 


இரண்டு கட்டங்களாக இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. மதுரவாயில் முதல் சென்னை வெளிவட்டச் சாலை வரை முதலில் அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திட்டமானது வெளிவட்ட சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பாலத்தில் செல்லும் வாகனங்கள், 120 கிலோமீட்டர் வேகத்தில் அந்த வழித்தடத்தை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிங்க: Tidel Park U Shaped Bridge : வரமா?சாபமா? டைடல் பார்க் மேம்பாலத்தை திறந்தும் குறையாத வாகன நெரிசல்.. காரணம் என்ன?


எவ்வளவு நேரம் ?


தற்போது சூழலில் ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயல் வரை செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், 15 முதல் 20 நிமிடத்தில் நிமிடத்தில் 23 கிலோமீட்டர் தூரத்தை கடக்க முடியும். இதன் மூலம் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயண நேரமும் இதனால் பயண நேரமும் வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.