ராஜீவ் காந்தி சாலையில் உள்ள இந்திரா நகர் மற்றும் திருவான்மியூரில் உள்ள இரண்டு "U" வடிவ மேம்பாலங்கள் வாகனப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், டைடல் பார்க் சந்திப்பை இருவழி சிக்னலாக மாற்றும் திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஒத்திவைத்துள்ளன.
U வடிவ மேம்பாலம்:
டைடல் பார்க் சந்திப்பில் உள்ள U-வடிவ மேம்பாலம் செவ்வாய்க்கிழமை(25.02.2025) அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். ECR-ல் இருந்து வரும் வாகனங்கள் இனி மத்திய கைலாஷ் சந்திப்பை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் இடதுபுறம் திரும்பி இந்திரா நகர் நோக்கிச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறையாத போக்குவரத்து நெரிசல்:
திருவான்மியூர்-இந்திரா நகர் பிரிவில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் காரணமாக, நான்கு வழிச் சாலையான (சர்வீஸ் லேன் உட்பட) ராஜீவ் காந்தி சாலை இரட்டைப் பாதையாக (ஆறு மீட்டர்) குறுகுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, துரைப்பாக்கம் மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் ("U" வடிவ மேம்பாலத்தில்) திருவான்மியூர்-இந்திரா நகர் பிரிவில் உள்ள குறுகிய பகுதியில் சந்திக்கின்றன, இதனால் அந்த இடத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
"தற்போது, துரைப்பாக்கம் மற்றும் SRP டூல்ஸ்-லில் இருந்து வாகன ஓட்டிகள் திருவான்மியூர், ECR மற்றும் அடையாறு ஆகியவற்றை அணுக வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்" என்று போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் (TNRDC) அதிகாரிகள் தெரிவித்தனர்.
டைடல் பார்க் சந்திப்பு சிக்னலை நான்கு வழிச்சாலையிலிருந்து இரு வழி பாதையாக மாற்றுவதற்கான திட்டம், OMR மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில் நெரிசலைக் குறைக்க 2019 இல் தொடங்கப்பட்ட "டைடல் பார்க் சந்திப்பில் விரிவான ஒருங்கிணைந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்" திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தில் இரண்டு "U" வடிவ மேம்பாலம், டைடல் பூங்காவில் நடைபாதை மேம்பாலம் மற்றும் ராஜீவ் காந்தி சாலையில் ரூ.108.13 கோடி செலவில் சாலையை அகலப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
தாமதம் ஏன்?
துரைப்பாக்கம்/SRP டூல்ஸ் இருந்து பயணிக்கும் வாகனங்கள் கூடுதலாக 1 கி.மீ மாற்றுப்பாதையில் சென்று இந்திரா நகரில் உள்ள மேம்பாலத்தைப் பயன்படுத்தி U-Turn திருப்பம் செய்ய வேண்டும். அங்கிருந்து, வாகன ஓட்டிகள் இடதுபுறத்தில் இந்திரா நகர் 2வது அவென்யூ சாலையைக் அடைந்து, அடையாறு/RA புரம் செல்லும் வழியாக செல்ல வேண்டும். ECR (திருவான்மியூர்/கொட்டிவாக்கம்) நோக்கிச் செல்வோர் தொடர்ந்து வாகனம் ஓட்டி இடதுபுறம் திரும்பலாம். இருப்பினும், மெட்ரோ ரயில் பணிகளால் சாலை குறுகளால உள்ளதால் ஏற்படும் கடுமையான நெரிசல் காரணமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: EPFO : இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! அதிகரிக்கும் வட்டி விகிதம்! ஓய்வுதியத்தில் மாற்றம் ஏற்படுமா?
தற்போது "சோதனை அடிப்படையில், போக்குவரத்து நெரிசல் இல்லாதபோது, துரைப்பாக்கத்திலிருந்து இந்திரா நகர் நோக்கி செல்லும் வாகனங்கள் நேராக பயணிக்க அனுமதிக்கிறோம். இந்த மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்றால், ஒரு பகுதியை இந்திரா நகர் 2வது அவென்யூ சாலை வழியாக அடையாறு நோக்கி திருப்பிவிடலாம். இது இணைக்கப்பட்ட சாலையின் பயன்பாட்டை அதிகரிக்கும், இறுதியில் நெரிசலைக் குறைக்க உதவும்," என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.