Chennai Peripheral Ring Road Status: சென்னை அருகே உள்ள எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் மிக முக்கிய துறைமுகங்களாக உள்ளது. தொழிற்சாலையில் இருந்து துறைமுகத்திற்கு, செல்லும் கனரக வாகனங்கள் தாமதமாக செல்வதால், வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் துறைமுகத்திற்கு செல்ல முடியாததால், மத்திய மற்றும் மாநில அரசுக்கு பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
பிரச்சனைக்கு தீர்வு என்ன? Solution For Chennai Traffic
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், புதிய சாலையை அமைக்க அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பாக மாநில அரசு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரியில் துவங்கி, சிங்கப்பெருமாள் கோயில் வழியாக ஸ்ரீபெரும்புதூர் - தாமரைப்பாக்கம் - தச்சூர் - மீஞ்சூர் - காட்டுப்பள்ளி -எண்ணூர் துறைமுகத்தை சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 137 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
சென்னை எல்லைச்சாலை திட்டம் - Chennai Peripheral Ring Road Project
இந்த திட்டத்திற்கு சென்னை எல்லைச்சாலை திட்டம் என பெயர் வைக்கப்பட்டது. மிகவும் நீண்ட சாலை என்பதால் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த சாலை பணிகளை மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இந்த சாலை பத்து வழிச்சாலையாக அமைய உள்ளது. சுமார் 12,301 கோடி ரூபாய் செலவில் இந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
காட்டுப்பள்ளி துறைமுகம் - தச்சூர் வரை, தச்சூர் முதல் திருவள்ளூர் வரை, திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை, ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை, சிங்கப்பெருமாள் கோயில் முதல் மாமல்லபுரம் வரை என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டது. காட்டுப்பள்ளி துறைமுகம் முதல் தச்சூர் வரை மற்றும் தச்சூர் முதல் திருவள்ளூர் வரை 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் - சிங்கப்பெருமாள் கோயில் சாலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் இடையே நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிலம் அளவை செய்யப்பட்டு, எல்லைகளை வரையறுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் பணிகளில் கட்டுமானம் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
இணையும் சாலைகள் என்னென்ன? Chennai Peripheral Ring Road Connectivity
இந்தச் சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளை இணைக்கும் வகையில் அமையப்பட உள்ளன.
கூவம் ஆற்றில் நீண்ட மேம்பாலம்
திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் கூவம் ஆற்றில் நீண்ட மேம்பாலம் கட்டுமானம் செய்யப்படவுள்ளன. இதற்காக ஆற்றில் மண் பதில் சோதனையும் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இங்கு பாலம் கட்டும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திடீரென எழுந்த பிரச்சினை
சென்னை எல்லை சாலை திட்டம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது சில இடங்களில், தண்ணீர் தேங்குவதற்கான அபாயம் இருந்தது. அந்தப் பகுதிகளை மேடாக்குவதற்காக, அனல் மின் நிலையங்களில் இருந்து நிலக்கரி எரிந்த சாம்பலை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவை கிடைக்காததால், திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏரிகளிலிருந்து மண் எடுத்து பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போதுதான் பயன்பாட்டிற்கு வரும் chennai peripheral ring road completion date
கடந்த ஆண்டு ஜனவரியில் இந்த எல்லைச்சாலை திட்டம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இந்த எல்லைச்சாலை திட்டம் வருகின்ற 2028 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.