இந்தியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை தினம் ஆண்டு தோறும் சென்னையில் மிகச்சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் பீச்சில் சென்னை மாநகராட்சி சார்பில் வழக்கம்போல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சென்னை தினத்தை ஒன்று சேர்ந்து கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்

இன்றும், நாளையும் பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் நடைபெற உள்ள சென்னை தின கொண்டாட்டத்தில் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்: Twins Namitha : எனக்கு இரட்டை குழந்தைகள்.. நமீதா சொன்ன ஹேப்பி நியூஸும், நெகிழ்ச்சி கதையும்..

கொரோனா தடுப்பூசி

அதேபோல, சென்னை தின சிறப்பு ஏற்பாடாக எலியட்ஸ் பீச்சில் உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பதால், விழா நிகழ்ச்சிகளில் மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

என்னென்ன எதிர்பார்க்கலாம்?

சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெசன்ட் நகரில் ஆகஸ்ட் 20 முதல் 21 வரை (மாலை 4 மணி முதல் 1130 மணி வரை) பிரத்யேக சென்னை நைட் நிகழ்வை ஏற்பாடு செய்கிறோம். இந்த பிரத்தியேகமான கொண்டாட்டத்தில் சுமார் 50 ஸ்டால்கள் வைக்கப்படுகின்றன, அதில் 25 ஸ்டால்கள் உணவு மற்றும் உணவு தொடர்பானவை மற்றும் 25 ஸ்டால்கள் கைவினைப்பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள் போன்றவை இடம்பெறும். பாரம்பரிய விளையாட்டுகள், நேரடி மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் நடத்துகிறோம்", என்று CII ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விழாவை ஒட்டி போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன… வாகன ஓட்டிகள் அவற்றை அறிந்துகொண்டு பெசன்ட் நகர் பக்கம் சென்றால் சிறப்பு. 

Madras Day 2022 : சென்னை தின கொண்டாட்டம்.! போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள்! முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.