Twins Namitha : எனக்கு இரட்டை குழந்தைகள்.. நமீதா சொன்ன ஹேப்பி நியூஸும், நெகிழ்ச்சி கதையும்..

Namitha latest insta post: நமீதாவிற்கு கிருஷ்ணா ஜெயந்தி நாளன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்ஸ்டா போஸ்ட்.

Continues below advertisement

Namitha blessed with twin boy babies: கவர்ச்சி கன்னி நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்...திரை பிரபலங்கள் வாழ்த்து 

Continues below advertisement

அந்த காலத்தில் சில்க் ஸ்மிதா இந்த காலத்தில் நமீதா எனும் அளவிற்கு ஒரு கவர்ச்சி கன்னியாய் வளம் வந்து அனைவரையும் செல்லமாக மச்சான்ஸ் என்று அழைத்து வந்த நடிகை நமீதா. தனது 17 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பின்னர் தென்னிந்திய சினிமாவில் உச்சத்திற்கு சென்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து திரையுலகிலும் கவர்ச்சியில் கொடி கட்டி பறந்தவர் நமீதா. 

தமிழ் சினிமாவில் அறிமுகம் :

2004ல் வெளியான "எங்கள் அண்ணன்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அவருடைய ட்ரேட் மார்க் வார்த்தையே மச்சான்ஸ் தான். பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். கொஞ்ச காலம் அரசியலிலும் ஈடுபட்டு பிரச்சாரம் எல்லாம் செய்தார் நமீதா. 

கர்ப்பகால போட்டோஷூட் :

2017ம் ஆண்டு நமிதாவிற்கும் நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான நமீதா அவ்வப்போது தனது பேபி பம்ப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். அவரின் டெலிவரிக்கு முன்னர் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. 

 

இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் நமீதா :

நமீதாவுக்கு கிருஷ்ணா ஜெயந்தி நாள் அன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகள் மற்றும் கணவரோடு எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் நமீதா. மேலும் அந்த போஸ்டில் கடவுள், மருத்துவர், மருத்துவமனை என அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். அனைவரின் ஆசிகளும் அன்பு அந்த குழந்தைகளுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார் நமீதா. திரைபிரபலங்கள் நமீதாவுக்கு அவர்களின்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   

 

Continues below advertisement
Sponsored Links by Taboola