இந்தியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383வது நாள் வரும் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னை தினத்தை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




போக்குவரத்து மாற்றம்


சென்னை தினத்தை முன்னிட்டு, சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மாலை 6 மணி முதல் வரும் ஆகஸ்ட் 22-ந் தேதி மாலை 6 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • இதன்படி, இன்று மாலை 6 மணி முதல் வரும் 22-ந் தேதி மாலை 6 மணி வரை பெசன்ட் நகர் 7வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது நிழற்சாலை நோக்கி திருப்பி விடப்படும்.

  • 16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது நிழற்சாலையை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, 2வது நிழற்சாலை மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படுகிறது.

  • 3வது பிரதான சாலையில் இருந்து 6வது நிழற்சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, 3வது பிரதான சாலை மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும்.

  • 4வது பிரதான சாலை மற்றும் 5வது நிழற்சாலையில் இருந்து 6வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 4வது பிரதான சாலை மற்றும் 5வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும்.


சென்னை மாநகராட்சி சார்பில் இன்றும், நாளையும் எலியட்ஸ் கடற்கரையில் பிரம்மாண்டமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மக்கள் கூடி சென்னை தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.


மேலும் படிக்க : அந்த மனசுதான் சார் கடவுள்! பசிக்காக திருட வந்தவருக்கு சாப்பாடு போட்ட நபர்! நெகிழ்ச்சி சம்பவம்!


மேலும் படிக்க : Engineering Counselling: பொறியியல் கலந்தாய்வு: எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு, இடஒதுக்கீடு?- முழு விவரம்