போதை..


 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர், ரெட்டி தெருவை சேர்ந்தவர் ராமு (45) . இவர் அரசினர் மேல்நிலை பள்ளி அருகில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு ரேணுகா (40) மனைவி, தினேஷ் (20) மகன், திவ்யா (15) என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் குடிபோதைக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போயுள்ளார்.



 

பின்னர் ஒரு வருடத்திற்கு முன்பு மேல்மருவத்தூர் கோவிலில் அவரைப்பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்து ஒரு மாதத்திற்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பி அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலிருந்தபடியே மதுவுக்கு அடிமையாகி அடிக்கடி பெற்றோர்களிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தந்தை மகனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவு 10 மணிக்கு பாரதி நகர் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால்  மொட்டை மாடியில் கணவன், மனைவி இருவரும் தூங்க சென்றுள்ளனர். 



 

வெட்டிக்கொலை..


 

மகள் திவ்யா அருகில் உள்ள அவரது பெரியம்மா வளர்மதி வீட்டில் தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நள்ளிரவு 1.30 மணிக்கு தினேஷ் மாடிக்குச் சென்று அவரது அம்மாவிடம் கரண்ட் வந்துவிட்டது உள்ளே சென்று தூங்கு எனக் கூறி அனுப்பி வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை ராமுவை கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். 

 

ராமு அலறல் சத்தம் கேட்டு வந்த தனது தாயைக் கண்டதும் தினேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டான். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ராமுவை மீட்டு தனியார் வாகனத்தின் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமு வரும் வழியிலேயே, இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் தினேஷை தேடி வருகின்றனர்.

 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண


”டான்ஸ் தப்பா ஆடுனா மாஸ்டர் திட்டுவாரோனு பயப்படுவாரு“ - ரஜினி குறித்து ஜான் பாபு மாஸ்டர்