நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் நவம்பர் 22ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டிருந்தார்.


 






இதனையடுத்து கமலின் உடல்நிலை குறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கமலின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக உள்ளார்'” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்களும், கட்சியினரும் நிம்மதியடைந்தனர்.


இதற்கிடையே கமலின் மகள் ஸ்ருதி ஹாசனும், என் தந்தையின் ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் பிரார்த்தனைக்கு நன்றி. அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில், உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளார்” என குறிப்பிட்டிருந்தார்.




இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான் நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை” என்றார்.


முன்னதாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 11ஆவது மெகா தடுப்பூசி முகாமினை அவர் இன்று பார்வையிட்டார். மேலும்  தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்வின்போது எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்பு’ மாநாடு படம் எப்படி இருக்கு..?


20வது ஆண்டை நெருங்கும் சிம்பு: 11 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்த சோகம்.. எங்கே சறுக்கினார்?


ABP Nadu Exclusive :’தடைகளை கடந்து ஜெயிச்சது சந்தோஷமா இருக்கு’ மாநாடு இயக்குநர் வெங்கட்பிரபு சிறப்பு பேட்டி..!