இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது. இருந்தப்போதும்  ஏப்ரலில் ஏற்பட்ட பாதிப்பின் எண்ணிக்கை நாளொன்றுக்கு  லட்சத்தைக்கடந்த நிலையில் பல்வேறு உயிரிழப்புகளும் பதிவாகினர். 


இதையடுத்து, இந்தியாவை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டது. மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் தளர்வுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது இயங்கி வருகின்றனர். 


இந்தநிலையில், சென்னையில் ரூட் தல, பஸ்டே கொண்டாட்டம் போன்றவற்றால் ஏற்படும் மோதல்கள் மீண்டும் தலைதூக்க தொடங்கிவிட்டது. 




ரூட் தல : 


ஒரு சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரயில் மற்றும் பஸ்களில் ரூட் தல யார் என்பதில் கடுமையான போட்டி நிலவும். இதனை தடுக்க ஆண்டுதோறும், மாதந்தோறும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஆங்காங்கே இதுபோன்ற தகராறுகள் நடைபெற்று வருகிறது. 


மேலும் படிக்க : 'லவ் ஜிகாத்' காதலில் ஏமாந்த வலி... அவனை தண்டிப்பதே ஒரே வழி.. தற்கொலை செய்த பெண் உருக்கமான கடிதம்!


இதேபோல், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று முன்தினம் மதியம் மாணவன் ஒருவர் பைக்குடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் அங்கு வந்த ஒரு மாணவன், ரூட் தலபிரச்சனை தொடர்பாக இவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர். இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த அரும்பாக்கம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அங்கு திரண்டு தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு கல்லூரி மாணவனை தாக்கினர்.


இதனால், அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. தகவலறிந்து வந்த அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடினர். போலீசார் அவர் களை விரட்டி சென்று 2 பேரை மடக்கி பிடித்து. காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.


தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தள்ளாடிய மாப்பிள்ளை... போதை மணமகனுக்கு குட்பை சொல்லி மாலையை வீசிய மணப்பெண்!


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொட


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண