பள்ளி வராததை தலைமை ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி கோதை. இவர்களது மகள் சுவேதா (வயது14). இவர் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காலம் என்பதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் சுவேதா கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.


இந்த நிலையில் சம்பவத்தன்று சுவேதா பள்ளிக்கு சென்றார். அப்போது சுவேதாவை வகுப்பு ஆசிரியை கண்டித்து பெற்றோருடன் தலைமை ஆசிரியரை பார்த்து விட்டு வரும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி சுவேதா தனது சகோதரர் அமரனை அழைத்துக் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்தார். அப்போது பள்ளி தலைமையாசிரியர் 10-ம் வகுப்பு என்பது முக்கிய படிப்பாகும்.




இப்படி பள்ளிக்கு வராமல் இருந்தால் எப்படி தேர்வு எழுத முடியும் என்றும், படிக்க விருப்பம் இல்லையென்றால் டி.சி.யை வாங்கி கொண்டு செல்லும்படி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சுவேதா மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியை கண்டித்ததால் விரக்தியடைந்த சுவேதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் குளியல் அறைக்கு சென்று சுவேதா அங்குள்ள ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார்.


வெகு நேரமாக குளியல் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சுவேதாவின் சகோதரர் அமரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுவேதா தூக்கில் தொங்குவதை கண்டு அமரன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுவேதாவை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுவேதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இது குறித்து சுவேதாவின் தாய் கோதை ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் தற்கொலைக்கு காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடியூபில் வீடியோக்களை காண