ராமநாதபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண், இன்ஜினியரிங் படித்தவர். இவரது பக்கத்து தெருவில் வாடகை வீட்டில் வசிக்கும் நபர் அன்வர் மகன், ஷேக் முகமது, 30. இவர் கடந்த 2018 ம் ஆண்டு ராமநாதபுரம் தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அப்போது, அப்பெண்ணை காதலிப்பதாக தெரிவித்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஷேக் முகமது அம்மாவும் இவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணிடம் உறவு கொண்டுள்ளார்.
இந்தநிலையில், 2019ல் ஷேக் முகமது குடும்பம் திருச்சி சென்றது. அதன்பின், திருமணம் செய்ய மறுத்ததோடு அலை பேசி எண்ணையும் 'பிளாக்' செய்துள்ளார். இதனால், மனமுடைந்த பெண் கடிதம் எழுதி வைத்து நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய அந்த கடிதத்தில், மோசடியாக தன்னை திட்டமிட்டு காதலிப்பதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதேபோல் பல பெண்கள் அவனால் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவனை அவன் அம்மாவையும் சும்மா விடாதீங்க, என் வாழ்க்கையாவே அழிச்சுட்டான். ப்ளீஸ்! போலீஸ் இனி யாருக்கும் இந்தமாதிரி நடக்கக்கூடாது என அவர் தற்கொலைக்கு முன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி லவ் ஜிகாத் என்கிற வார்த்தையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரி அம்மா, அப்பா! அவனால உங்க ரெண்டு போரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். என்ன மன்னிச்சுருங்க. மேலும், தன் தற்கொலைக்கு முக்கிய காரணமான இருந்த ஷேக் முகமது, அவரது தந்தை அன்வர்,தாய், மாமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, கேணிக்கரை போலீ சார், நான்கு பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.ஷேக் முகமதுவை கைது செய்ய, தனிப் படை போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் ராமமூர்த்தி தெரிவிக்கையில், 'அப்பாவி பெண் பொறியாளர் தற்கொலைக்கு காரணமான ஷேக் முகமதுவை கைது செய்து, பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிய வேண்டும் என்றும், தற்கொலை செய்த பெண் லவ் ஜிகாத் பற்றி குறிப்பிட்டுள்ளதால், முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் காவல்துறையினர் மெத்தனம் காட்டினால், தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். பாதிக்கப் பட்ட பெண் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்