கடந்த இருபது அண்டுகளாக வழங்கப்பட்ட இலவச குடிமனை பட்டாக்கள் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பதால் உடனடியாக அப்பணிகள் துவங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஓருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அய்வுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், ஊரக தொழில் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்து.
வருவாய்த்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த், அரசு கூடுதல் செயலர் பனிந்தரரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், ராகுல் நாத், இரண்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறைசார் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்டதில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்றுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு இரண்டு மாவட்டங்களில் 10 அயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளுது. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை மீண்டும் ஆய்வு செய்திட அரசு அலுவலர்களிடம் தெரிவிக்க்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் 2006 முதல் 2011 வரை வழங்கப்பட்ட இலவச குடிமனை பட்டாக்கள் கிராம கணக்குகளில் ஏற்றப்படாமல் உள்ளது. உடனடியாக கிராம கணக்கில் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்டதிற்கு வரவேண்டிய கோப்புகளை உடனடியாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நில மதிப்பு அதிகமுள்ள இந்த மாவட்டங்களில் தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை வைத்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் நிலத்தை எடுக்க கணக்கு எடுக்க அரசு அலுவலரிடம் உத்திரவிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக அரசு புறம்போக்கு நிலங்களில் நீர்நிலை தவிர்த்து குடியிருந்து வரும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக தெரியவருகின்றது .இதுகுறித்து தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து விதிகளை தளர்த்தி மின் இணைப்பு வழங்கப்படும் என்றார். இதன் மூலம் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஏராளமான வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகள் படிங்க அன்று பாம்பே வரை ஏற்றுமதியான கருங்குழி வெற்றிலை..! காய்ந்து காணாமல் போன கதை என்ன ?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X