காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியில் 7 ஆண்டுகளாக வசித்து வருபவர் தங்கவேல்(44). இவருக்கு விமாலாராணி (37) என்ற மனைவியும் , ஹரிஷ்ராகவ்(14) என்ற மகன் உள்ளனர். இவர் ஓரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.



இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவரது சகோதரர் சக்திவேல் தனது தம்பி தங்கவேலை தொலைபேசியில், தொடர்பு கொண்ட பொழுது அவரது மனைவி விமலா ராணி, மகன் ஆன்லைன் கிளாஸில் இருப்பதாக தெரிவித்து தொலைபேசி துண்டிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் கடந்த 1 ஆம் தேதி தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் 2 ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் சக்திவேல் சந்தேகமடைந்தார்.

 

இதனையடுத்து தங்கவேலின் தந்தை சோமங்கலம் காவல் நிலையத்தில் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகி, தன் கணவரை கடந்த 28 ஆம் தேதி மதியம் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருவாமனையால் அவரது கழுத்தில் 2 முறை வெட்டியதால் சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

 

 

இரவு 10 மணி வரை பிரேதத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் தனது கள்ளகாதலனான சேலத்தை சேர்ந்த ராஜா என்பவரை வரவைத்து அருகில் உள்ள ஏரியில் பிரேதத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தன் கணவர் தன்னுடைய கள்ளக்காதலை கைவிட வேண்டும் என சண்டையிட்ட காரணத்தினால், தான் அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து காவல்துறையினர்,  இன்று காலை 8 மணிக்கு அளவில் ஏரியில் பிரேதத்தை மீட்டெடுப்பதற்காக முயற்சி செய்தனர். அப்பொழுது முன்னுக்குப் பின்னான பதிலை விமலா ராணி தெரிவித்துள்ளார். 



இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் பாணியில் விசாரணை நடத்தியதில் , விமலாராணி  கடந்த 2 ஆம் தேதி அவரின் உடலை செங்கல்பட்டு மாவட்டம்  தொழுப்பேடு அருகே உடலை எரித்து விட்டதாக உண்மை தகவலை தெரிவித்தார். அந்த பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து இருந்தனர் . இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உறவினர்கள் உதவியுடன் தங்கவேலின் உடலை உறுதி செய்தனர்.

 

மணிமங்கலம் காவல்துறையினர் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி விமலா ராணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கள்ளக்காதலன் ராஜாவை 3 தனிப்படை அமைத்து  காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தங்கவேலை கொலை செய்வதற்கு கள்ளக்காதலன் உதவி புரிந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 கள்ளக்காதலால் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. 

 


மேலும் செய்திகள் படிங்க காஞ்சிபுரம் : முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டி படுகொலை : நடந்தது என்ன?


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X