1.வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவ தடுப்பூசி 2 டேஸ் போடாதவர்களுக்கு அனுமதி இல்லை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் கல்லூரி முதல்வர் தகவல்.
2. விழுப்புரம் காவல் துறையினரால் மானபங்கம் செய்யப்பட்டு, அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் உள்பட 15 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3. சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். சிவசங்கர் பாபா மீது இதுவரை 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
4. வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் சரி செய்யும் பணி தொடங்கியது. பாலாற்று வெள்ளத்தால் சேதமான பைப்லைன்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைந்ததும் வேலூர் மாவட்டத்தில் குடிநீர் வழக்கம்போல் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
5. காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா அறக்கட்டளை சாா்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
6. மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நாளை மறுநாள் 23ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, சுற்றுலாத் துறை சார்பில் மேடை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
7. திருக்கழுக்குன்றம் அருகே கிருஸ்துவ தேவாலயம் கட்டியிருந்த இடத்தை ஆற்றுக்கால் புறம்போக்கு இடம் என கூறி பொதுப்பணி துறையினர் இடித்தனர்.
8. சென்னை பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீஸாா் மீட்டனா்.
9.நடிகர் மம்முட்டிக்கு சொந்தமானநிலத்தை, கழுவேலி புறம்போக்கு நிலமாக வகை மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10. வரி ஏய்ப்பு தொடா்பாக நெய்வேலியில் செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்