1. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் 440 கி.மீட்டர் துாரத்திற்கு, சாலைகள் சேதமடைந்துள்ளன.

 

 

2. மத்திய அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 13 லட்சம் ஏமாற்றி வரை செங்கல்பட்டு நகர காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

3. காஞ்சிபுரம் பெண்களை தொழில்முனைவோராக உருவாக்க 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

 

 

4. காஞ்சிபுரம் ஒன்றியத்தில், நடப்பாண்டு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 591 பேர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டது.

 

5. காஞ்சிபுரம் ஒன்றியத்தில், நடப்பாண்டு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 591 பேர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டது.

 

 

6. சொகுசு கப்பலில் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாங்கி தருவதாக ரூ.48 இலட்சம் மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர், அவரின் உதவியாளர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

 

7. ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

 

 

8. சென்னையில் காய்கறிகளின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.  குறிப்பாக தக்காளி, முருங்கை கிலோ ரூ.120-ஐ எட்டியுள்ள நிலையில், விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

 

 

9. சென்னையில் குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் மருமகனிடம் ரூ.6.30 கோடி மோசடி செய்ததாக 4 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

10. நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

 

 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...



ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்