சமூகத்தில் தற்போது எந்தத் தொழிலை எடுத்துக்கொண்டாலும் அதில் டிசைன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே டிசனைகர்களுக்கான டிமாண்டும் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கென்று பிரத்யேக கல்லூரிகள் என்று எடுத்துக்கொண்டால் இதுவரை பெரிதாக எதுவும் இல்லை.
இந்நிலையில் சென்னையில் டிசைனுக்கென்றே பிரத்யேகமாக கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் ராம்நாத் என்பவரால் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கல்லூரிக்கு பெயர் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன். ஆர்ட் கேலரி, சிறந்த வகுப்பறைகள், அரங்குகள், ஆய்வுக்கூடங்கள் என அனைத்தும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்லூரியில் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து நூறுக்கணக்கான மாணவ - மாணவிகள் பயில்கின்றனர். இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய வடிவமைப்பு நிறுவனம் (NID), தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) ஆகியவற்றில் பயின்ற முப்பது பேர் இங்கே ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
ராம்நாத் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க்கும், தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஆர்க்கும் படித்து முடித்திருக்கிறார். இவர் ஆர்க்கிடெக்சராக வேலை செய்தபோது தனக்கு சரியான ஜூனியர்கள் கிடைக்கவில்லை என்பதால் டிசைனுக்கென்றே தனியாக கல்லூரி ஆரம்பிக்க முடிவு செய்தார்.
முதலில் அண்ணா நகரில் சென்டர் மட்டும் ஆரம்பித்த ராம்நாத் காலப்போக்கில் இந்தக் கல்லூரியை தொடங்கியிருக்கிறார். இந்தக் கல்லூரியில் வெறும் டிசைன் மட்டும் கற்றுக்கொடுக்காமல் வாடிக்கையாளரை அணுகும்விதம், வாடிக்கையாளரை நடத்தும் விதம் என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கல்லூரியில் சேர்வதற்கு 12ஆம் வகுப்புல அறிவியல், கணக்கு பிரிவோ, காமர்ஸ் பிரிவோ எடுத்து படித்திருக்க வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை. டிசைனராவதற்கு அடிப்படைத் தகுதிகள் இருக்கின்றனவா என பார்த்துவிட்டு அட்மிஷன் நடைபெறுகிறது. தற்போது இந்தக் கல்லூரியில் நூற்றுக்கணக்கானவர்கள் படித்தாலும் வருங்காலங்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: தமிழ்நாட்டில் தொடங்கிய முன் பனிகாலம்: மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்!
Watch Video: ‛ஆர்.எஸ்.எஸ்., போல சேவை செய்ய விரும்புகிறேன்...’ வடிவேலு மகன் பரபரப்பு பேட்டி!
இந்திய-பாக்., எல்லையில் பிறந்த குழந்தை: ‛பார்டர்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!
‛டார்ச்சர் பண்றாங்க... உலகை விட்டு பிரிகிறேன்...’ எஸ்.பி.,க்கு கடிதம் அனுப்பிய பெண் காவலர் மீட்பு!