1. செங்கல்பட்டில் தொடர் மழை காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி மீது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்தில் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

2. சென்னை, கடற்கரை ரயில் நிலையம் அருகே உயா் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சார ரயில்கள் 40 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

 


3.நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் முறைகேடுகள் நிகழ வாய்ப்புள்ளதால் தாம்பரம் மாநகராட்சிக்கு சென்னை மாநகராட்சியுடன் சோத்து ஒரே நாளில் தோதல் நடத்த வேண்டும் என்று மாநில தோதல் ஆணையத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க .தலைவா் வேதசுப்ரமணியம் கோரிக்கை விடுத்தாா்.

 

4. காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய ஆணையராக நாராயணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே இருந்த லட்சுமி, மறைமலை நகர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது லட்சுமி ஆணையராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த மாதம் நகராட்சி, மாநகராட்சியாக முறையாக பெயர் மாற்றப்பட்டது.தற்போது, புதிய மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள நாராயணன், கோயமுத்துார் நகர்புற பயிற்சி மைய துணை இயக்குனராக பதவி வகித்து வந்தார். அவர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

 


5. சென்னை குரோம்பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

6.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மழைநீா் சூழ்ந்துள்ள உத்தரமேரூா், வாலாஜாபாத் ஆகிய வட்டங்களில் அனைத்து வகை பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகாம்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.



7.  தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

 

8.வடகிழக்கு பருவ மழையினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு  மற்றும் சேதாரங்களை பார்வையிட மத்தியகுழு இன்று முடிச்சூர் (வரதராஜபுரம்) பகுதி மற்றும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை இலத்தூர் ஊராட்சி ஒன்றியம்  (வடபட்டினம்) பகுதிகளில் பார்வையிட உள்ளார்கள்.

 

9. சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.91 ஆயிரம் அடங்கிய பையை காவல் உதவி ஆய்வாளா் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

 

10. தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 10-வது கட்ட மெகா முகாமில்18.21 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.