தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் பணிக்காகவும், வேலைக்காகவும் இடம்பெயர்ந்து பணிபுரிந்தும், கல்வி பயின்றும் வருகின்றனர். இவர்கள் தொடர் விடுமுறை கிடைத்தால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.


இந்த நிலையில், வரும் திங்கள் கிழமை சுதந்திர தினம் என்பதால் நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை ஆகும். இதன்காரணமாக, வெளியூரில் இருந்து சென்னை வந்து தங்கி நபர்களும், மாணவர்களும் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர்.




இதன்காரணமாக. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் தென் தமிழகத்திற்கு செல்லும் பயணிகள் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும்.


மேலும் படிக்க : வினாத்தாள் மொழி மாறி வந்த விவகாரம்: மீண்டும் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி அறிவித்த தேசிய தேர்வு முகமை


இதை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருச்சி, கடலூர், கும்பகோணம், விழுப்புரம், சேலம், கோவை மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.




சென்னைக்கு அடுத்தபடியாக வெளியூர்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் தங்கி பணிபுரியும் மாவட்டமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் விழா நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதனால், கோவை, திருப்பூர் மாவட்ட பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.


சென்னையில் காவல்துறையினரும், போக்குவரத்து துறையினரும் இணைந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. திருநெல்வேலி செல்வதற்கு ரூபாய் 3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.


மேலும் படிக்க : Flag Hoisting:சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றுவது குறித்து தலைமைச் செயலாளர் அவசர உத்தரவு!


மேலும் படிக்க : ராஜீவ் காந்தி பிறந்த நாள் : இரண்டு ஜோதி துவக்க விழாக்கள்.. குழம்பும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண