சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது சி.என்.கே.சாலை. இந்த சாலையில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்த பை ஒன்றை நாய்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இழுத்துக்கொண்டிருந்தது. அதில், மனித உடலின் பாகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக பையில் இருந்த மனித பாகங்களை கண்டபோது, அது பச்சிளங்குழந்தையின் உடல் பாகம் என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர.
இதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் பச்சிளங்குழந்தையின் சடலம் அடங்கிய பையை வீசிச்சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, குழந்தையை வீசிச் சென்ற நபரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த நபர் கூறிய தகவல் போலீசாரையே கண்கலங்க வைத்தது.
அதாவது, அந்த நபர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, “ எனது பெயர் தனுஷ். நான் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அவ்வப்போது சிறையில் அடைக்கப்பட்டு வந்தேன். என்னுடைய முதல் மனைவி இறந்துவிட்டார். என்னுடைய இரண்டாவது மனைவி, கவிதா. திருமணத்திற்கு பிறகு திருந்தி வாழ்ந்து கூலி வேலைக்கு சென்று வந்தேன்.
மேலும் படிக்க : Crime : இப்படியுமா கொடூரம்? மனைவி மீது சந்தேகம்... ஆயுதமாக மாறிய சேலை.. பயத்தில் முதியவரின் முடிவு..
இந்த சூழலில், என்னுடைய இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை இறந்துவிட்டது. குழந்தையை அடக்கம் செய்ய ரூபாய் 3 ஆயிரம் பணம் தேவைப்பட்டது. ஆனால், என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. இதனால், எனக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு துக்கம் ஏற்பட்டது.
டாஸ்மாக் சென்று மது அருந்தினேன். எனது பாக்கெட்டில் ரூபாய் 150 மட்டுமே இருந்தது. இதையடுத்து, கடைக்கு சென்று ரூபாய் 10க்கு சணல் பை வாங்கினேன்.அந்த பையில் உயிரிழந்த எனது குழந்தையின் சடலத்தை போட்டு, குப்பைத் தொட்டியில் வீசினேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
தனுஷ் கூறிய வாக்குமூலம் அங்கிருந்த காவல்துறையினர் அனைவருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் அவரது மனைவி கவிதாவிற்கு பிரசவம் ஏற்பட்டு குழந்தை பிறந்தபோது இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Pink Bus : மகளிர் பேருந்தின் எல்லாப் பக்கங்களிலும் பிங்க் கலர்.. விமர்சனம் எழுந்ததால் தமிழ்நாடு அரசு முடிவு
மேலும் படிக்க : World Elephants Day : வண்டலூரில் பார்வையாளர்களின் கவனத்தை கவரும் செல்லக்குட்டி யானைகள் ரோகிணி, பிரகதி..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்