வினாத்தாள் மொழி மாறி வந்த விவகாரம்: மீண்டும் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி அறிவித்த தேசிய தேர்வு முகமை

சுதந்திர தினம் விநாயகர் சதூர்த்தி போன்ற விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் இந்த நுழைவுத் தேர்வை தள்ளி வைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி  மத்திய பல்கலைக்கழகங்களில்  மாணவர்கள் சேர்வதற்கான இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு நாடு முழுவதும் 259 நகரங்களில் 489 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வு திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கோவில்வெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்றது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் கடந்த ஆகஸ்ட் 4 ல் 657 மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 403 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதன்முறையாக தமிழ் மொழியும் இடம் பெற்று இருந்தது.  இந்த நிலையில் தமிழ் மொழியில் வினாத்தாளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வினாத்தாள் மாறி வந்தது. மேலும் சர்வர் பிரச்சினை காரணமாக ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு வினாத்தாள் பதிவிறக்கம் ஆகவில்லை. இதனால் அன்று மதியம் 3 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவடைய வேண்டிய தேர்வு மாலை 5:30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. 

Continues below advertisement


இதில் சர்வர் பிரச்சினை காரணமாக அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நுழைவுத் தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டது. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் வேறு மொழியில் மாறி வந்த மாணவர்கள் மற்றும் சர்வர் பிரச்சனை காரணமாக வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் காரணமாக வினாத்தாள் வேற்று மொழியில் மாறி வந்த மாணவர்கள் மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவர்கள் மற்றும் தேர்வு ரத்து செய்யப்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.  இந்த நிலையில் மொழி மாறி வினாத்தாள் வந்த விவகாரம் மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் ஆகாத மாணவ, மாணவிகள் மற்றும் சர்வர் பிரச்சனை காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட இடங்களில் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவ மாணவிகளுக்கான மறு நுழைவுத் தேர்வை தற்போது தள்ளிவைத்து வரும் ஆகஸ்ட் 24 முதல் 28 வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


சுதந்திர தினம், விநாயகர் சதூர்த்தி போன்ற விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் இந்த நுழைவுத் தேர்வை தள்ளி வைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  மேலும் இந்த மறு நுழைவு தேர்வுக்கான நுழைவுச்சீட்டை மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இணைய பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த நேரங்களில் தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்வது கடினமாக இருக்கும் என்று மாணவர்கள் வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் இந்த நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola