வேடந்தாங்கல் சரணாலயம் அருகே உள்ள மருந்து தயாரிக்கும் சன் பாா்மா நிறுவனத்தின் விரிவாக்க பணிக்கு இடைக்கால தடைவிதித்து தென் மண்டல தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே மருந்து தயாரிக்கும் நிறுவனமான சன் பாா்மா செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கூடுதலாக மருந்து உற்பத்தி செய்வதற்கான விரிவாக்க பணிக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு 3.7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சரணாலயத்தைச் சுற்றி உள்ள 5 கி.மீ பரப்பளவும் சரணாலயமாக கருதப்படுவதாக தமிழ்நாடு அரசு 1998- ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
மேலும் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஏதேனும் கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றால் தேசிய வன உயிா் வாரியத்தின் அனுமதி அவசியம் என விதிகள் உள்ள நிலையில், சன் பாா்மா நிறுவனம் இதுவரை வன உயிா் வாரியத்தின் அனுமதி பெறவில்லை எனவும், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் விரிவாக்க பணிக்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேசிய தென் மண்டல பசுமை தீா்ப்பாயத்தில் தியாகராஜன் என்பவரால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்யநாராயணன், நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் அமா்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் சன் பாா்மா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதிக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அதுவரை தற்போது உள்ள நிலையிலேயே விரிவாக்க பணி நிறுத்தப்பட வேண்டும் எனவும் விசாரணைக்காக வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனா்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
”டான்ஸ் தப்பா ஆடுனா மாஸ்டர் திட்டுவாரோனு பயப்படுவாரு“ - ரஜினி குறித்து ஜான் பாபு மாஸ்டர்
காஞ்சிபுரம் : மத்திய அமைச்சர் விழாவை புறக்கணித்த தமிழக அமைச்சர்கள்.. என்ன நடந்தது?