காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்‌புதூரில்‌ உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் சுமார்‌ 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள்‌ பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் மருத்துவ சேவைகள் பெற இஎஸ்ஐசி மருத்துவமனை அமைக்க கோரிக்கை எழுந்தது.இதைத்‌ தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் இஎஸ்ஐசி மருத்துவமனை கட்ட மத்திய தொழிலாளர்‌ வேலைவாய்ப்பு துறை அமைச்சகம்‌ முடிவு செய்து , நிலம் ஒதுக்கி தர தமிழ்நாடு அரசிடம்‌ கேட்டு கொண்டதன் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர்‌ வல்‌லம்‌ வடகல் கிராமத்தில்‌ 5.12 ஏக்‌கர்‌ நிலம்‌ ஓதுக்கப்பட்டது.


காஞ்சிபுரம் : மத்திய அமைச்சர் விழாவை புறக்கணித்த தமிழக அமைச்சர்கள்.. என்ன நடந்தது?

 

இந்நிலையில் ரூ.155 கோடியில்‌ புதியதாக 100 படுக்கைகள்‌ கொண்ட இஎஸ்ஜசி மருத்துவமனை அமைப்பதற்கு நேற்று  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு & சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மத்திய தொழிலாளர்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பெட்ரோலியத்‌ துறை இணையமைச்சர்‌ ராமேஸ்வர்‌ தெளி அடிக்கல் நாட்டினார். இம்மருத்துவமனையினால் காஞ்சிபுரம், ஒரகடம், படப்பை, திருமுடிவாக்கம், பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிலாளர்‌கள் மற்றும்‌ அவர்களது குடும்பத்தினர்‌ உள்‌ளிட்ட சுமார் 8 லட்சம்‌ பேர் பயனடையவுள்ளனர்.

 



இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி ,வல்லம் வடகால் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி விமலா தேவி தர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடிக்கல் நாட்டு கல்வெட்டில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை ஆகியோரின் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், யாரும் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தது தொழிற்சாலை நிர்வாகிகள், தொழிலாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது

 

 

தற்போது துவங்கப்பட்டுள்ள மருத்துவமனையில் காஞ்சிபுரம் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகள் என பல்வேறு தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். காஞ்சிபுரம், ஒரகடம், படப்பை, திருமுடிவாக்கம், பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிலாளர்‌கள் மற்றும்‌ அவர்களது குடும்பத்தினர்‌ உள்‌ளிட்ட சுமார் 8 லட்சம்‌ பேர் பயனடையவுள்ளனர், என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண


 


”டான்ஸ் தப்பா ஆடுனா மாஸ்டர் திட்டுவாரோனு பயப்படுவாரு“ - ரஜினி குறித்து ஜான் பாபு மாஸ்டர்