சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நாய்கள் கடித்ததில் சிறுமி காயமடைந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பூங்காக்களில் நாய்களை அழைத்து வர சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது. 


சென்னை மாநகராட்சி விதித்துள்ள கட்டுப்பாடுகள்:



  •  பூங்காவுக்குள் ஒரு உரிமையாளர் ஒரு நாயை மட்டுமே அழைத்து வர வேண்டும்,

  • நாயை உரிய கயிற்றை கொண்டு கட்டுவதுடன், அதன் வாய்ப்பகுதியை மூடியிருக்க வேண்டும், 

  • நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும்.

  • தெருநாய்க்கள் மற்றும் கயிறு கட்டப்படாத நாய்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படாது,

  • பூங்காவில் குழந்தைகள் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


என்ன நடந்தது?


சென்னை ஆயிரம் விளக்கு அருகேயுள்ள அரசு மாதிரி பள்ளி பகுதியில் அமைந்துள்ள பூங்காவில்,  2 ராட்வெய்லர்  சிறுமி சுதக்‌ஷாவை கடுமையாக தாக்கி கடித்துள்ளது. இதனைப் பார்த்த நாயின் உரிமையாளர் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சோனியா நாய்களிடம் இருந்து குழந்தையை காப்பாற்றினார். இந்த போராட்டத்தில் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பலத்தா காயமடைந்த சிறுமியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆயிரம் விளக்கு போலீசில் இந்த சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்பட்டது. 


உடனடியாக விசாரணையில் களமிறங்கிய போலீசார், நாயை பூங்காவில் விட்டு விட்டு சென்ற புகழேந்தியை பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். குழந்தைக்கான சிகிச்சை செலவை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறிய நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பூங்காக்களில் நாய்களை அழைத்துவர விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.




மேலும் வாசிக்க..


நாய் பிரியர்களா நீங்கள்? ஜாக்கிரதை! வளர்க்கும் முன் இந்த ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க!


Rottweiler Dog: ராட்வெய்லர் நாய் வகைகள் ஆபத்தானவையா? மத்திய அரசு தடை விதித்த பிறகும் விற்கப்படுவது ஏன்?