கடலுக்குள் சேரும் தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலுக்குள் சுமார் 50 அடி ஆழத்தில் நடந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதி சார்ந்தவர் சுரேஷ்  இவரும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சார்ந்த  கீர்த்தனாவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னையில் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்து வந்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பாக நண்பர்களாக இருந்த இருவரும் காதலர்களாக மாறி இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

 



 

வித்தியாசமாக தங்களது நிச்சயதார்த்தம் நடத்திக் கொள்ள நினைத்த இவர்கள், கடலில் சேரும் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு, தங்களது நிச்சயதார்த்த நிகழ்வை சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த வெட்டுவாங்கேனி கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி ஆழத்தில் சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் சிலிண்டருடன் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தன் பயிற்சியோடு, 50 அடி ஆழத்தில் கடல் நீருக்குள் மூழ்கிஇருவரும் மாலை மாற்றிக் கொண்டதோடு தங்க மோதிரத்தையும் ஒருவருக்கொருவர்  அணிவித்து தங்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தினர்.



 

முன்னதாக சுரேஷ் மற்றும் கீர்த்தனாவிற்கு நீச்சல் குளத்தில் ஆழ்கடலில் எப்படி நீந்துவது என்பது குறித்தான பயிற்சியை நீச்சல் குளத்தில் ஆழ்கடல் நீர்ச்சல் பயிற்சியாளர் அரவிந்த் வழங்கினார். இதையடுத்து இருவரும் ஆழ்கடலில் தங்களது நிச்சயதார்த்தத்தைவித்தியாசமான முறையில்  நடத்திக் கொண்டனர்.