ஐஎஃப்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன். இவர் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களிடமிருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று கடந்த இரு மாதங்களாக வட்டி தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்தனர். இதே போல் தமிழகம் முழுவதுமுள்ள இடைதரர்கள் மீது தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.


 

இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 5-ஆம் தேதியன்று தமிழகத்தில் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் காஞ்சிபுரம் கிளை மேலாளராக இருந்த மின்மினி சரவணன் என்பவரது வீட்டிற்கு 5 பேர் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொள்ள சென்ற நிலையில் அவரது வீட்டானது பூட்டிருந்தது. இதனையெடுத்து அவரது வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் சீல் வைக்கப்பட்டது.

 


 

இந்நிலையில் கடந்த  வாரம் மின்மினி சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை  கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சேர்ந்த ஜெகன் என்கிற ஜெகநாதன் மற்றும் குப்புராஜ் ஆகியோர் கைது செய்துள்ளனர். ஜெகநாதன் என்பவர் குப்புராஜ் கணக்கில் சுமார் 8 கோடி ரூபாயை ஒரே நாளில் வரவழைத்தது, தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மீது 420 ,120 பி உள்ளிட்ட பிரிவின் கீழ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து கோடி கணக்கில் மோசடிகள் வெளிவருவதால் முதலீட்டார்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

 

காவல்துறையினர் தீவிர விசாரணை

 

தொடர்ந்து முதலீடு செய்யப்பட்ட கோடிக்கணக்கான பணம் எங்கே சென்றது, யாரிடம் இருக்கிறது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலீடாக பெற்ற பணத்தை காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கிறார்கள் என்று என தெரிந்து கொண்டதிலிருந்து, பினாமிகளின் பெயரில் பணத்தை மாற்றுவதும் சொத்துக்களை வாங்குவதும் என இருந்து வந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


 








முதலீடு தொடர்பான தகவல்கள் வெளியாகின


ஐஎஃப்எஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் 79 ஆயிரம் பேரிடம் 4,383 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதே போல் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 89 ஆயிரம் பேர் 1680 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதும், திருச்சியை சேர்ந்த Elpin -e-Com Ltd என்னும் நிறுவனம் சுமார் 5000 நபர்களிடமிருந்து 400 கோடி ரூபாய் முதலீடு பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிவித்துள்ளது. 3 நிறுவனங்கள் தொடர்பாகவும் 19 வழக்குகளை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  


காவல்துறை அறிவிப்பு


பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் விசாரணை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. eowlnsifscase@gmail.com ஆர்பிஐ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் தங்கள் பணத்தை சேமிக்க/டெபாசிட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.