தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில்,  மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய அமலுக்கு வந்தது.  இந்நிலையில் தலைநகரான சென்னைக்குள் பயணிக்கும் மக்களுக்கு இ-பதிவு அவசியம் என அரசு அறிவித்தது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸி என சென்னைக்குள்ளான பயணத்துக்கே இ-பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இ-பதிவுக்கான இணையதளத்தில் ஆட்டோ, பைக் பயணங்களுக்கான ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இ பாஸ் வெப்சைட் அப்டேட் செய்யப்பட்டு இ-பதிவு முறையில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் பயணத்துக்கான ஆவணம், பயணத்துக்கான காரணம், எங்கு செல்ல வேண்டும்? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.


விண்ணப்பிக்க: https://eregister.tnega.org/#/user/pass


முன்னதாக, இ-பதிவு தொடர்பான பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. வாடகை கார், ஆட்டோக்கள் சென்னைக்குள் செல்வதற்கே இபாஸ் வேண்டுமா? தடுப்பூசி போட செல்பவர்கள் இபாஸ் எடுக்கவேண்டுமா? போன்ற சில தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்கவே இந்தத் தகவல்களை கொடுக்கிறோம்.




யாருக்கெல்லாம் இ- பதிவு தேவை?


தனியார் செக்யூரிட்டி ஆட்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் இ-பதிவு மூலம் பயணிக்கலாம்


எலெக்ட்ரீசியன், ப்ளம்பர்ஸ், கணினி மற்றும் மோட்டார் பழுது நீக்குபவர்கள், மர வேலை செய்யும் தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்யும் டெக்னீஷியன்கள் ஆகியோர் இ-பதிவு மூலம் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை பயணிக்கலாம்.
 
வாடகை கார், வாடகை வாகனங்கள் 3 பயணிகளுடன் இ-பதிவு பெற்று பயணிக்கலாம். ஆட்டோவும் இ பதிவு பெற்று இரண்டு பயணிகளுடன் பயணிக்கலாம்


சென்னைக்குள் பயணம் செய்யும் தனியார் வாகனங்களுக்கும் இ-பதிவு அவசியம்




Narthaki Nataraj : மாநிலக் கவுன்சிலில் ஒரு திருநங்கை! - தேவை என்ன?




கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இ-பதிவு தேவையா?


கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடுப்பூசி மையத்திற்கு பயணம் செய்தால் இ-பதிவு தேவையில்லை. தடுப்பூசிக்கான முன்பதிவை காண்பித்தால் போதுமானது.




மற்ற தளர்வுகள்:


* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.


* காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.


* இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.


* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறையை பின்பற்றி செயல்படுத்த அனுமதி உண்டு.


* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.


* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளலாம்.


 * தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் அனுமதி.


* மின்பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.




* இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.


* வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.


* கல்வி, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி


* இருசக்கர வாகனம் விநியோகிக்கும் கடைகள் வாகன பழுதுபார்க்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி


* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து பெற்று பயணிக்கு அனுமதிக்கப்படும்.




‛குட்டையில் இறங்கி மீன்பிடி திருவிழா: கட்டையுடன் போலீஸ் வந்ததும் எஸ்கேப்லா’