Harassment Case Rajagopalan: பாலியல் ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கு: 300 மாணவிகள் விபரம் சேகரிப்பு!

சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த  வாக்குமூலத்தில், கடந்த 10 ஆண்டுகளில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Continues below advertisement

மாணவிகளின் தொடர் புகாரால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதில், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியில் 11,12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்வதாக கூறியும், சிறப்பு வகுப்பு என மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து விடுமுறை நாட்களில் பள்ளி அறையிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், அதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. ஆனால், மாணவிகளின் புகார்கள் மீது பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், பள்ளியில் நடைபெறும் பாலியல் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் ஆசிரியர் ராஜகோபாலனையும் நியமித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனால் தனது மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார்களை ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணைந்து வெளியே தெரியாமல் மறைத்து புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராகவே மாற்றியதும் தெரியவந்தது.

Continues below advertisement

ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரு பாலியல் புகார்கள்!

பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பு ஆசிரியராக இருந்துள்ளார். இதனால் ராஜகோபாலன் தனது வகுப்பு மாணவன் என்ற முறையில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் மகனுடன் தற்போதும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திகொண்டு அசைக்க முடியாக நபராக பள்ளியில் இருந்து வந்துள்ளார்.


இதனால் மாணவிகளிடம் அவர் தவறான  எண்ணத்தில் மற்றும் பள்ளியின் முதல்வருக்கும் தெரிந்தும் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ராஜகோபாலன் தனது வகுப்பு மாணவனான பள்ளி  நிர்வாக குழு உறுப்பினர் மகன் இருக்கும் தைரியத்தில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த விசாரணையின்போது மாணவிகளின் பாலியல் விவகாரத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? என்பது குறித்து 100 பக்கம் வாக்குமூலம் ராஜகோபாலன் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த வாக்குமூலத்தின்படி 10 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் விவரங்களை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட  மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர் மீது இதுவரை 40க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் தற்போதைய மாணவிகள் மட்டும் புகார் அளித்துள்ளனர். மீதமுள்ள மாணவிகள் பாலியல் தொடர்பாக போலீசாருக்கு எந்தவித புகார்களும் வரவில்லை.  ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் படி பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் புகாரளித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பள்ளி முதல்வர் மர்ரும் தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்களிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் ராஜகோபாலன் மீது வழக்கு; ஜூன் 8 வரை நீதிமன்ற காவல்!

Continues below advertisement