ஆறு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளுடன் சென்னை - கன்னியாகுமரி பண்டிகை கால சிறப்பு ரயில். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 100 பேருந்துகளும், பல்வேறு இடங்களுக்கு 170 பேருந்துகளுக்கு இயக்கப்படவுள்ளது. 13.10.2024 ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை முடிந்து திருப்ப ஏதுவாக மதுரை கோட்டத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 110 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. அதே போல் கோயபத்தூர், திருச்சி என ஏராளமான இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரை போக்குவரத்து கழகத்தின் https;//www.tnstc.in.& TNSTC mobileapp அல்லது இணையதளம் மூகம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06193) அக்டோபர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.20 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06194) அக்டோபர் 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - savitri jindal: பாஜகவிலிருந்து நீக்கம்: சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நாட்டின் பணக்கார பெண்: யார் இவர் ?