வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கொட்டி வருகிறது. நேற்று இரவு மட்டும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. புறநகரான எண்ணூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழையினாலே கடுமையான அவதிக்குள்ளாகியுள்ள சென்னைவாசிகள் இந்த மழையினால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையின் பெரும்பாலான சாலைகள், முக்கிய சந்திப்புகள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அளிப்பதற்காக உதவி எண்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலையில் இருந்து மட்டும் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு மதியம் 12 மணிக்குள் சுமார் 300க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் உதவிகோரி வந்துள்ளது.
உதவி கோரி அழைப்பு விடுத்தவர்கள் பலரும் தாங்கள் மழைநீரினால் சூழப்பட்டிருப்பதாகவும், தங்களது பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். காலை வரை சுமார் 2.5 லட்சம் மக்களுக்கு போதியளவிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 1800 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : அவரு சாகல' துரிதமாய் செயல்பட்ட பெண் போலீஸ்! தோளில் தூக்கிச் சென்று காப்பாற்றிய சிங்கப்பெண்!
சென்னை நகரின் முக்கிய வர்த்த நகரான தி.நகர் மழைநீர் சற்றும் வடியாமல் முழுவதும் தேங்கியுள்ளது. தி.நகர் மட்டுமின்றி ராயப்பேட்டை, புரசைவாக்கம், அரும்பாக்கம், அமைந்தகரை, கே.கே.நகர், விருகம்பாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், பாடி, ஓட்டேரி, அம்பத்தூர், கோயம்பேடு, கோடம்பாக்கம், பாரிமுனை, நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளின் முக்கிய சாலைகளும் மழைநீரினால் மூழ்கியுள்ளது. மேலும, பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், சென்னை மக்களின் இயல்புநிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கூறியுள்ள உதவி எண்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தவகையில் உள்ளது. முதல்வரும், மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் உடனுக்குடன் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : Tamil Nadu Rain : ட்விட்டரில் லீவா எனக் கேட்ட ஸ்கூல் பையன்.. ஸ்கூல் போகச் சொல்லி ரிப்ளை செய்த கலெக்டர்!
Watch Video | நடு இரவு..! கொட்டும் மழை! நிற்காத பணி! நெகிழ வைக்கும் சென்னையின் தூய்மை பணியாளர்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்