நல்ல அதிகாரிகள் செயல்பாட்டால் நேற்று (04.11.2023) சென்னை தப்பியது என மிக்ஜாம் புயலில் துடிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பராட்டியுள்ளார்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி ஆந்திரா பகுதியை நோக்கி சென்றபோது சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பலத்த காற்று வீசியது. ஏரிகள் நிரம்பின. ஏரிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மீட்பு பணிகள், இராட்சத மோட்டர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்கள் மழை வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் பொது மக்கள் வாழ்க்கை கடுமையாஅக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களின் பெரும் பணியை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.டி., தினகரன் பாராட்டியுள்ளார். “ நல்ல அதிகாரிகள் செயல்பாட்டால் நேற்று (04.11.2023) சென்னை தப்பியது என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து நல்ல முறையிலே செயல்பட்டு விரைவிலே பேரிடரிலிருந்து சென்னை மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப போர் கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு இடங்களில் இன்னும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. மழை நீர் வடிந்துள்ள இடங்களில் மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை முழுவதும் தற்போது 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் குறைந்ததும் பேருந்து சேவைகள் முழுவதுமாக இயக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 70 சதவீத தொலைத்தொடர்பு சீரமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 சதவீத தொலைத்தொடர்பு சீரமைப்பு பணிகளும் முடிவடைந்து விரைவில் வழங்கப்படும். மேலும், மழை பாதித்த பகுதிகளில் ஆவின் நிறுவன பால் விநியோகம் சீராக கொடுக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 1.26 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று சிவ்தாஸ் மீனா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள்:
- கணேசபுரம் சுரங்கப்பாதை
- கெங்குரெட்டி சுரங்கப்பாதை
- செம்பியம் சுரங்கப்பாதை
- வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
- துரைசாமி சுரங்கப்பாதை
- மாட்லி சுரங்கப்பாதை
- ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
- மவுண்ட், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை
- சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை
- பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
- சி.பி. சாலை சுரங்கப்பாதை
- வியாசர்பாடி சுரங்கப்பாதை
- திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
- ஆர்பிஐ சுரங்கப்பாதை
- கோயம்டு, புதிய பாலம் சுரங்கப்பாதை
- ஹாரிங்டன் சுரங்கப்பாதை
- சூளைமேடு, லொயாலா சுரங்கப்பாதை ஆகியற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.
போக்குவரத்தில் மாற்றம்:
மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாக்கம் சாலையிலான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடயே, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்டு வருகின்றனர். ராணுவத்தினரும் பல பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகுகளை வாடகைக்கு எடுத்தது மட்டுமின்றி, மீனவர்களின் படகுகளும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓர்ரு நாட்களில் சென்னை முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க..