செங்கல்பட்டு மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸில் ”இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” அதிரடி சிறப்பு விற்பனை 24.07.2023 முதல் 20.08.2023 வரை சிறப்பு விற்பனை துவக்கியுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம்

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : கோ-ஆப்டெக்ஸ் என்றால் கைத்தறி, கைத்தறி என்றால் கோ-ஆப்டெக்ஸ்  என அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வரும் ஒரு தலைமை கூட்டுறவு நிறுவனமாகும்.

Continues below advertisement

விழா காலங்களில் சிறப்பு தள்ளுபடி

வாடிக்கையாளர்களின் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரின் மாறிவரும் ரசனைக்கேற்ப, அவர்களின் தேவைகளை அறிந்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்புகளின் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ரகங்களை இந்தியாவிலுள்ள தனது விற்பனை நிலையங்களில் விற்பனை செய்தும், விழா காலங்களில் சிறப்பு தள்ளுபடி அளிதும் இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்தும் வருகிறது.

இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்

கோ-ஆப்டெக்ஸ் தனது வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இவ்வாண்டிலும் “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற சிறப்பு விற்பனை துவக்கியுள்ளது. இச்சலுகை 24.07.2023 முதல் 20.08.2023 வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.  இச்சிறப்பு விற்பனையில் சில குறிப்பிட்ட ரகங்களுக்கு மட்டும் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடையும் தள்ளுபடி அதிகபட்சமாக 33.33% ஆகும். மொத்த துணிகளுக்கு வழக்கம்போல் 20% தள்ளுபடி அளிக்கப்படும்.

நெசவின் உழைப்பை ஊக்கப்படுத்தவும்

காஞ்சிபுரம் பட்டு, ஆரணி, திருபுவனம் பட்டு புடவைகளும், நெகமம்சுங்கடி, கோவை கோரா, செட்டிநாடு பருத்தி புடவைகள், சேலம் பட்டு வேஷ்டிகள், பவானி ஜமுக்காளம், ஆண்களுக்கான ஆயத்த சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகளும், போர்வைகள், திரைச்சீலைகள், குர்த்தீஸ்கள், ஏற்றுமதி ரகங்கள் என கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 07 கைத்தறி தினத்தை முன்னிட்டும், ஆடி விழாவை முன்னிட்டும், தீபாவளி பண்டிகை கருத்தில் கொண்டும் பொது மக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளவதுடன் இதன் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நெசவின் உழைப்பை ஊக்கப்படுத்தவும், கைத்தறி ஆடைகளை வாங்கி ஊடுத்தும்படி செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண