வட கிழக்குப் பருவமழை நெருங்குவதை முன்னிட்டு, சென்னையில்  களப்பணிகளை கண்காணிப்பதற்காக குடிநீர் வாரியத்தின் சார்பில் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி அனைத்துப் பகுதி அலுவலகங்களிலும் 15 மேற்பார்வை பொறியாளர்கள், 15 சொற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.


குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான குறைகளை சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களிடம் பொதுமக்கள் கூறி உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






முன்னதாக வடகிழக்குப் பருவமழை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கினார்.


Also read: Chennai Rain : கொளுத்தி எடுத்த வெயிலுக்கு வெய்ட்டீஸ்.. சென்னையில் இந்த இடங்களில் குளிரவைக்கும் மழை..


ஆலோசனை கூட்டம்:


செப்டம்பர் 26ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றனர்.








இக்கூட்டத்தில் ”வடகிழக்குப் பருவமழை சில வாரங்களில் தொடங்கவுள்ளது. அதையொட்டி பருவ மழையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்” என ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார். வருவாய் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கினார்.


மேலும், இந்த முறை சென்னையில் முக்கிய இடங்களில் மழைநீர் தேங்காது என நம்புவதாகவும், அதற்காக அதிகாரிகள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.




மேலும் படிக்க: Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை


Skytrax World Airline Awards 2022 : கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஏர்லைன்ஸ் பட்டியல் ! முதலிடத்தை பிடித்த ‘கத்தார் ஏர்லைன்ஸ்’!