செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐந்து சுற்றுகளுக்கான போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பாதையில் முன்னேறி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று ஒருநாள் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று செஸ் போட்டியில் கவனம் செலுத்தாமல், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் வீரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். 



 

முன்னதாக நேற்று நள்ளிரவு பெர்முடா பார்ட்டி வைக்கப்பட்டிருந்தது இதில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இதில் விடிய விடிய நடைபெற்ற பார்வையில் வீரர்கள் மகிழ்ச்சியாக நடனம் ஆடினர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.





அதேபோல் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக பல்லவ சிற்பக் கலையை போற்றும் வகையில் உள்ள கடற்கரை கோவில், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.



இதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள வீரர்களுக்கு நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் 6 அணிகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 

 




Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண



Published at : 04 Aug 2022 01:50 PM (IST)