இந்தியா பெண்கள் ஏ அணி தொடர்ந்து மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்றுவிட்டது. செஸ் ஒலிம்பியா போட்டியில் நான்காவது சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்திய 'ஏ' அணி, ஹங்கேரியை சந்தித்தது, தொடர் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவிற்கு இருந்தது. தமிழகத்தின் வைஷாலி, 35வது நகர்த்தலில் வாஜ்டாவுடன் டிரா செய்தார் . கோனேரு ஹம்பி ஹோவாங், ஹரிகா- காரா டிசியா மோதிய போட்டிகள் 'டிரா' ஆகின. இதனால் களத்தில் இருந்த அந்த கடைசி வீராங்கனை, வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜோசோகாவுக்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய இந்திய வீராங்கனை , துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார்.
போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. 50 நகர்தல்கள் கடந்துவிட்டன ஆனால் முடிவு வரவில்லை. இந்தியாவிற்கு தேவை இந்த ஒரு வெற்றி அப்பொழுதுதான், அந்த வீராங்கனை தனது 53வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில், இத்தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவை தனி ஆளாக தானிய சத்தேவ் வெற்றி பெற வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் நான்கு வெற்றிகள் மற்றும் இரண்டு டிரா செய்து இருந்தார் தானியா. ஆறு போட்டிகளில் விளையாடி இந்தியாவிற்காக 5 புள்ளிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் தானியா.
டெல்லியை சேர்ந்த இவர் 1986 ஆம் ஆண்டு பிறந்தார். 35 வயதாகும் தானிய தன்னந்தனியாக இந்தியாவிற்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். எட்டு வயதாக இருந்த பொழுது சதுரங்க விளையாட்டை விளையாட துவங்கியுள்ளார். 12 வயதுக்கு உட்பட்டோர் இந்திய சாம்பியன், 2000 ஆம் ஆண்டு 14 வயதுக்குட்பட்டோர் ஆசியா சேம்பியன் , 2005 ஆம் ஆண்டு பெண் கிரான் மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றார். 2006 மட்டும் 2007 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய மகளிர் பிரீமியம் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆசிய பெண்கள் குழு சாம்பியன் பட்டத்தை 2008, 2009, 2012, 2014 ஆம் ஆண்டுகளில் அணிக்காக நான்கு வெள்ளிப் பதக்கங்கள், தனிநபருக்காக மூன்று வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் கிடைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்தார். இவ்வளவு சாதனைகளை புரிந்து தானிய 35 வயதிலும் செஸ் ஒலிம்பியாட்டில் கலக்கி வருகிறார்.