செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 13 வயது சிறுமி ஆகிய இருவரும் தாம்பரத்தில் இருந்து அரசு பேருந்தில் மதுராந்தகம் வந்து கொண்டிருந்தனர். அரசு பேருந்தில் மூன்று பேர் அமரும் இருக்கையில்  இருவரும் அமர்ந்து பயணம் செய்து வந்துள்ளனர். 



 

சிறுமி  அருகில் அமர்ந்திருந்த செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள முதுகரை கிராமத்தைச் சார்ந்த சதீஷ் வயது ( 35 ) என்பவர் அமர்ந்துள்ளார். மேலும், சிறுமி  மேல் கையை வைத்து தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அசோகர்யமாக இருப்பதை உணர்ந்த அருகில் இருந்த பயணிகள் இதுகுறித்து சிறுமியின் தாயிடம் தெரிவித்துள்ளனர்.



 

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாய்  மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் இளைஞரை தாக்கி உள்ளனர். மேலும், பேருந்து மதுராந்தகம் நகரை அடையும் பொழுது சதீஷ் பிடித்து மதுராந்தகம் காவல் இடம் ஒப்படைத்துள்ளனர். மதுராந்தகம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணை செய்ததில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சதீஷ் என்பதும், அவர் மதுராந்தகம் அருகே முதுகரை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் ,மேலும் காவலராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரிய வந்தது.  இதனை அடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர் சதீஷ் மீது மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில்  போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.  இதுகுறித்து காவல்துறையினரும் தொடர்பு கொண்டு கேட்டபோது ஓடும் பேருந்தில் காவலர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து உள்ளோம் என தெரிவித்தனர் . இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனவும் கூறினர்

 



மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!


Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!


இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண