Chennai Traffic Diversion: சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, கோட்டை பகுதியில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை பகுதியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால் 3 நாட்களுக்கு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எந்தெந்த இடங்கள்:
இதுகுறித்து, சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சுதந்திர தினவிழா வரும் 15ம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 4,10,13 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் மேற்கண்ட 3 நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படஉள்ளது.
- நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.
- காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.
- பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, ஈவெரா சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
- அண்ணா சாலையிலிருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம் என்.எப்.எஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை மெட்ரே ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறுவதால், அங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்து குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
அடுத்த செக்! வலையில் சிக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! - அமலாக்கத்துறை மனு மீது இன்று விசாரணை!