காஞ்சிபுரம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதில் பேப்பர் கப்புகளை பயன்படுத்தும் வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.



காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவதியற்ற மாணவனுக்கு  மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மாணவனை அழைத்துக் கொண்டு அவர் தந்தை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு  வந்தார். 

 

அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சுக் குழல் வழியாக மருந்தினை செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்தினர். டீ கடையில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தி , அதன் உதவியுடன் அந்த மருந்தினை மாணவனின் மூக்கு வழியாக செலுத்தி உள்ளார். மாணவரின் பெற்றோரே, விருப்பப்பட்டு இந்த கப்பை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது

 

டீ குடிக்கும் கப்புகளை வைத்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட மாணவருக்கு சிகிச்சை அளிப்பது, மிகவும் ஆபத்தான விஷயம்  என தெரிவிக்கின்றனர் . இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

 மருத்துவமனை விளக்கம் என்ன ? 

 

இதுகுறித்து  மருத்துவமனை வட்டாரத்தை ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “இது குறித்து இன்று இணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்று உள்ளது.  என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விசாரணை முடிவிலே தெரிய வரும்” எனத் தெரிவித்தனர்.  

 

”இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடமும் விளக்கம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது ஆனால்  அதை இதுவரை இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.  எனவே இனி மருத்துவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல் கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட  நோயாளி இதை பயன்படுத்தியதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை” என விளக்கம் அளித்தனர்



Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!



உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா? கவலையே வேண்டாம். 


சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம். நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்