பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாம்பரம் செங்கல்பட்டு மூன்றாவது பாதை அமைக்கும் பணி சுமார் ரூ.256 கோடி திட்ட மதிப்பில், தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 30 கிலோமீட்டர் தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பணிகள் 3 கட்டங்களாகப் பிரித்து  மேற்கொள்ளப்பட்டன. இதில்  முதல்கட்டமாக, கூடுவாஞ்சேரிமுதல் சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையங்கள் இடையே 11.07 கிலோமீட்டர் பாதை பணி முடிந்து 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 29 தேதி ஆய்வுப் பணி நடைபெற்றது.

 



இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக, சிங்கப்பெருமாள்கோவில் முதல் செங்கல்பட்டு இடையே 8.36 கிலோமீட்டர் தொலைவு பணி முடிந்து ரயில்வே  கடந்த ஆண்டு மாா்ச் 3ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து  இறுதிக்கட்டமாக, கூடுவாஞ்சேரி தாம்பரம் ரயில் நிலையங்கள் இடையே 11 கிலோமீட்டர் தொலைவில் பணிகள் நிறைவடைந்து. ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் தலைமையிலான குழுவினா் கடந்த ஆண்டு அக்டோபா் 21-ஆம்தேதி ஆய்வு செய்தனா். அப்போது, சில இடங்களில் திருத்தங்களை செய்ய அறிவுறுத்தினா்.மேலும் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே குறுகிய பாதையில் இருந்த சாலை மேம்பாலத்தை விரிவுப்படுத்தவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 



 இந்த நிலையில், செங்கல்பட்டு-தாம்பரம் மாா்க்கத்தில் பயணிகள் இல்லாத முதல் மின்சார ரயில் நேற்று இயக்கி சோதனை நடத்தப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து   மின்சார ரயில் செங்கல்பட்டுக்கு இயக்கப்பட்டது . சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் பயணிகளை வைத்து இன்னும் சில நாட்களில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை மூன்றாவது பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது பாதை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கூடுதலாக ரயில்களை இயக்குவதற்கு, ரயில்கள் தாமதம் இன்றி சரியான நேரத்திற்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


மேலும் படிக்க:'திகிலூட்டுகிறது'.. உக்ரைன் போரால் பதறிப்போன ப்ரியங்கா சோப்ரா!! இன்ஸ்டாவில் சோக பதிவு!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர






 





 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண