Chennai Power Cut: சென்னையில், நாளை ஜனவரி 30ஆம் தேதி, எந்தெந்த இடங்களில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
சென்னையில் நாளை மின்தடை: 30.01.2025
இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Mini Bus Fare: மினி பஸ்-க்கு புதிய கட்டணம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு..
சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்:
நங்கநல்லூர்:
விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ காலனி, பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி,கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ காலனி விரிவாக்கம், எஸ்.பி.ஐ காலனி பிரதான சாலை, சிவில் ஏவியேஷன் காலனி, வோல்டாஸ் காலனி, அய்யப்பா நகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்.பி.ஐ காலனி 3வது தெரு, டி.என்.ஜி.ஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளாகரம், ஆழ்வார் நகர் 46வது தெரு, மெக்மில்லன் காலனி, பெருமாள் நகர், எஸ்.பி.ஐ காலனி 3வது நிலை, ஏ.ஜி.எஸ் காலனி, துரைசாமி தோட்டம், 100 அடி சாலையின் ஒரு பகுதி,கண்ணையா தெரு, குலக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு 4வது பிரதான சாலையின் ஒரு பகுதி, இந்து காலனியின் ஒரு பகுதி, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, பழவந்தாங்கல் பகுதி,கிருஷ்ணசாமி தெரு மற்றும் மூவரசம்பேட்டை ஒரு பகுதி.
போரூர்:
துரைசாமிசாலை,சேக்கிழார் நகர், ஏரிக்கரை ரோடு, மலயம்பாக்கம், ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் நகர், திருவள்ளுவர் நகர், பொன்னியம்மன்கோவில் தெரு, திருநாகேஸ்வரம் காலனி, மங்களா நகர், சக்தி நகர்,பூந்தமல்லி மவுண்ட் பகுதி, கணேஷ் அவென்யூ ரோடு, காவியா கார்டன் சாலை மற்றும் போரூர் பகுதி.
மாங்காடு:
அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, அம்பாள் நகர், பாண்டியன் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளேஸ்வரர் கோவில் தெரு, எஸ்எஸ் கோவில் தெரு, பள்ளி தெரு, எம்ஜிஆர் நகர், வெள்ளீஸ்வரர் நகர், கிழக்கு காமாட்சி நகர், நரிவன சாலை, ராமகிருஷ்ணா அம்பாள் நகர்,
கோவூர்:
தங்கம் அவென்யூ, முகாம்பிகை நகர், ஈஸ்வர் நகர், வி.எஸ். நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர், தில்லை நடராஜர் நகர், மதுரா கார்டன்.
திருமுடிவாக்கம்:
கிஷ்கிந்தா மெயின் ரோடு, ராஜீவ் நகர். மாடம்பாக்கம்: பூமாலை, ராமர்கோயில், மப்பேடு, எஸ்பி அவென்யூ, அசோக் நகர், ஏகேபி கிரீன் பீல்ட்ஸ், எருமையூர்,டிஏ காலனி, முருகன் அவென்யூ, ரூபி வில்லா, ஸ்ரீ சாய் அவென்யூ, வெங்கம்பாக்கம் மெயின் ரோடு, மற்றும் கிரஷர் பகுதி,.
திருவேற்காடு: வெங்கடேஷ்வரா நகர், அபிராமி நகர், ஆனந்த் நகர், அரவிந்த் நகர், முருகன் நகர், கஸ்தூரி பாய் நகர், எல்லை அம்மன் கோவில், கஸ்தூரி அவென்யூ. அதேபோல, திருமுல்லைவாயல்:பாரதி நகர், ராம்ஜாமாஜி நகர், வெள்ளனூர் கிருஷ்ண கால்வாய், அரிக்கம்பேடு, கொள்ளுமேடு, நவசக்தி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், சிவன் கோவில் ரோடு, தேவி நகர் மற்றும் கே.பி.எஸ்.நகர்.
பராமரிப்பு பணி:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளாது.
இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.